PDF chapter test TRY NOW
முக்கோணச் சமனின்மைப் பண்பு:
ஒரு முக்கோணத்தின் எவையேனும் இரு பக்க அளவுகளின் கூடுதல் மூன்றாவது பக்க அளவை விட அதிகமாக இருக்கும்.

இங்கு, AB = c, BC = a மற்றும் CA = b.
a + b > c
b + c > a மற்றும்
c + a > b.
Example:
AB = c = 3 செ.மீ, BC = a = 4 செ.மீ மற்றும் AC = b = 5 செ.மீ ஆகிய பக்க அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா?

ABC என்ற முக்கோணச் சமனின்மைப் பண்பைச் சரிபார்க்க,
a + b = 4 + 5 = 9 > 3 = c
b + c = 5 + 3 = 8 > 4 = a மற்றும்
c + a = 3 + 4 = 7 > 5 = b.