PDF chapter test TRY NOW
முக்கோணத்தின் வகைகள் பற்றி காணலாம்:
பக்கங்கள் மற்றும் கோணங்களின் அடிப்படையில் முக்கோணத்தினை பல வகைகளாகப் பிரிக்கலாம்.
பக்கங்களின் அடிப்படையில் முக்கோணத்தின் வகைகள்:
- சமபக்க முக்கோணம்
- இருசமபக்க முக்கோணம்
- அசமபக்க முக்கோணம்
ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களும் சம அளவுடையவை எனில் அது ஒரு சமபக்க முக்கோணம் ஆகும்.

Example:

இங்கு, அனைத்து பக்கங்களும் சமம்.
அதாவது, AB = BC = CA = 5 அலகுகள்.
ஒரு முக்கோணத்தில் எைவயேனும் இரண்டு பக்கங்கள் சம அளவுடையவை எனில் அது ஓர் இருசமபக்க முக்கோணம் ஆகும்.

Example:

இங்கு, இரண்டு பக்கங்கள் சமம்.
அதாவது, AB=CA=1 அலகு மற்றும்BC=√2 அலகுகள்.
ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களும் வெவ்வேறு அளவுடையவை எனில் அது ஓர்
அசமபக்க முக்கோணம் ஆகும்.

Example:

இங்கு, மூன்று பக்கங்களும் வெவ்வேறு அளவுடையவை.
அதாவது, AB=7.7, CA=5 அலகுகள் மற்றும்BC=9 அலகுகள்.
கோணங்களின் அடிப்படையில் முக்கோணத்தின் வகைகள்:
- குறுங்கோண முக்கோணம்
- செங்கோன முக்கோணம்
- விரிகோண முக்கோணம்
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களும் குறுங்கோணங்களாக (0^\circ இக்கு மேல் 90^\circ இக்குள்) இருப்பின் அது ஒரு குறுங்கோண முக்கோணம் ஆகும்
Example:

இங்கு, முக்கோணத்தின் அனைத்து கோணங்களும் 90^\circ விட குறைவு ஆகும். அதாவது ∠A = 60^\circ, ∠B = 50^\circ மற்றும் ∠C = 70^\circ.
ஒரு முக்கோணத்தின் ஏதேனும் ஒரு கோணம் செங்கோணமாக (90^\circ) இருப்பின் அது ஒரு செங்கோண முக்கோணம் ஆகும்.
Example:

இங்கு, ∠A = 40^\circ, ∠B = 50^° மற்றும் ∠C = 90^°.
எனவே, இது ஒரு செங்கோண முக்கோணம் ஆகும்.
ஒரு முக்கோணத்தின் ஏதேனும் ஒரு கோணம் விரிகோணமாக (90^° இக்கு மேல் 180^°இக்குள்) இருப்பின் அது ஒரு விரிகோண முக்கோணம் ஆகும்.
Example:

இங்கு, ஒரு கோணம் 90^° விட அதிகமாக உள்ளது.
அதாவது, ∠A = 120^°, ∠B = 35^° மற்றும் ∠C = 25^°.