
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமுக்கோணத்தின் கோணங்களின் கூடுதல் பண்பு பற்றி பார்க்கலாம்.
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் 180^\circ
Example:
∠1, ∠2 மற்றும் ∠3 உட்கோணங்கள் கொண்ட ABC என்ற முக்கோணத்தை எடுத்துக்கொள்வோம்.

முக்கோணத்தின் கோணங்களின் கூடுதல் பண்பின்படி, ∠1 + ∠2 + ∠3 = 180^\circ.
Important!
ஒரு முக்கோணத்தில்,
- ஒரு முக்கோணத்தின்மூன்று கோணங்களும் வெவ்வேறானவை எனில்மூன்று பக்கங்களும் வெவ்வேறானவை.
- ஒரு முக்கோணத்தின் இரண்டு கோணங்கள் சமம் எனில் இரண்டு பக்கங்கள் சமம்.
- ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களும் சமம் எனில் மூன்று பக்கங்களும் சமம். ஒவ்வொரு கோணமும் 60^\circ ஆக இருக்கும்.
- ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் 180^\circ.