PDF chapter test TRY NOW

(i) இரண்டு இணைகோடுகள் ஒரு குறுக்குவெட்டியால்
வெட்டப்படும்போது, ஒத்த கோணங்கள் சமமாக இருக்கும்.
(ii) இரண்டு இணைகோடுகள் ஒரு குறுக்குவெட்டியால் வெட்டப்படும்போது, ஒன்றுவிட்ட உட்கோணங்கள் அளவில் சமமாக இருக்கும்.
(iii) இரண்டு இணைகோடுகள் ஒரு குறுக்குவெட்டியால் வெட்டப்படும்போது, ஒன்றுவிட்ட வெளிக்கோணங்கள் அளவில் சமமாக இருக்கும்.
(iv) இரண்டு இணைகோடுகள் ஒரு குறுக்குவெட்டியால் வெட்டப்படும்போது, குறுக்குவெட்டியின் ஒரே பக்கம் அமைந்த உட்கோணங்கள் (ஒத்த உட்கோணங்கள்) மிகை நிரப்பு கோணங்கள். அதாவது, ஒத்த உட்கோணங்களின் கூடுதல் 180^\circ ஆகும்.
(v) இரண்டு இணைகோடுகள் ஒரு குறுக்குவெட்டியால் வெட்டப்படும்போது, குறுக்குவெட்டியின் ஒரே பக்கம் அமைந்த வெளிக்கோணங்கள் (ஒத்த வெளிக்கோணங்கள்) மிகை நிரப்பு கோணங்கள். அதாவது, ஒத்த வெளிக்கோணங்களின் கூடுதல் 180^\circ ஆகும்.