PDF chapter test TRY NOW

வட்டத்தின் சுற்றளவு = 2\pi r அலகுகள்
 
வட்டத்தின் பரப்பளவு = \pi r^2 சதுர அலகுகள்
வட்டவில்லின் நீளம்
ஒரு வட்டக்கோணப் பகுதியின் மையக்கோணத்திற்கும் (\theta^\circ) அந்த வட்டத்தின் மையக்கோணத்திற்கும் (360^\circ) இடையேயுள்ள விகிதத்தால் வட்டத்தின் சுற்றளவைப் பெருக்கினால் அந்த வட்டக்கோணப் பகுதியின் வில்லின் நீளம் கிடைக்கும்.
 
வட்டக்கோணப் பகுதியின் வில்லின் நீளம், l = θ°360°×2πr அலகுகள்
Example:
7 \text{செ.மீ} ஆரமுள்ள ஒரு கால்வட்ட வில்லின் நீளத்தைக் கண்டுபிடி.
 
23.png
 
ஆரம் = 7 \text{செ.மீ}
 
கால்வட்டத்தின் கோணம் = 90^\circ
  
l = θ°360°×2πr
 
l = 90°360°×2×227×7
 
l = 14×2×22
 
l = 11 \text{செ.மீ}
 
கால்வட்ட வில்லின் நீளம் = 11 \text{செ.மீ}
வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவு
ஒரு வட்டக்கோணப் பகுதியின் மையக்கோணத்திற்கும் (\theta^\circ) அந்த வட்டத்தின் மையக்கோணத்திற்கும் (360^\circ) இடையேயுள்ள விகிதத்தால் வட்டத்தின் பரப்பளவைப் பெருக்கினால் அந்த வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவு கிடைக்கும்.
 
வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவு, A = θ°360°×πr2 சதுர அலகுகள்
Important!
1. ‘r’ அலகு ஆரமுள்ள ஒரு வட்டமானது n சமபாகங்களாகப் பிரிக்கப்பட்டால்:
 
வட்டக்கோணப் பகுதியின் வில்லின் நீளம், l = 1n×2πr அலகுகள்
 
வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவு, A = 1n×πr2 சதுர அலகுகள்
 
2. வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவு மாற்று முறை:
 
வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவு, A = θ°360°×πr2
 
= 12θ°360°×2πr2
 
= 12θ°360°×2πr×r
 
= 12l×r
 
= lr2 சதுர அலகுகள்
Example:
14 \text{செ.மீ} ஆரமுள்ள ஒரு அரைவட்டக்கோணப் பகுதியின் பரப்பளவைக் கண்டுபிடி.
 
16.png
 
ஆரம் = 14 \text{செ.மீ}
 
அரைவட்டத்தின் கோணம் = 180^\circ
  
A = θ°360°×πr2 சதுர அலகுகள்
 
A = 180°360°×227×(14)2
 
A = 12×227×14×14
 
A = 308
 
அரைவட்டக்கோணப் பகுதியின் பரப்பளவு = 308 \text{செ.மீ}^2