PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மூன்று எண்கள் சேர்ந்தால் அதனை மும்மடங்கு என்று கூறலாம்.
மும்மடங்கூடிய (a, b, c) இன் மூன்று இயல் எண்கள் ,a2+b2=c2 இந்த சூத்திரத்தின் அடிப்படையில் அமைந்தால் அதனை நாம் பிதகோரியன் மும்மடங்கு என்கிறோம்.
Example:
1. எண் (3, 4, 5) என்பது ஒரு பிதகோரியன் மும்மடங்கா என்று சரி பார்க்கவும்.
 
விடை:
 
இங்கு a = 3, b = 4 மற்றும் c = 5.
 
இடது பக்கம் = a^2 + b^2
 
= 3^2 + 4^2
 
= 9 + 16
 
= 25
 
வலது பக்கம் = c^2
 
= 5^2 = 25
 
25 = 25
 
இடது பக்கம் = வலது பக்கம்.
 
ஆதலால் கொடுக்கப்பட்டுள்ள எண், (3, 4, 5) பிதகோரியன்மும்மடங்கு என்று கூறலாம்.
 
 
2. எண் (6, 8, 9) என்பது ஒரு பிதகோரியன் மும்மடங்கா இல்லையா என்று சரி பார்க்கவும்.
 
விடை:
 
இங்கு a = 6, b = 8 மற்றும் c = 9.
 
இடது பக்கம் = a^2 + b^2
 
= 6^2 + 8^2
 
= 36 + 64
 
= 100
 
வலது பக்கம். = c^2
 
= 9^2 = 81
 
 100 \ne 81
 
இடது பக்கம் \ne வலது பக்கம்
 
ஆதலால், (6, 8, 9) என்பது பிதகோரியன் மும்மடங்கு அல்ல.
பிதகோரியன் மும்மடங்கின் சூத்திரம்
எதாவது ஒரு இயல் எண்ணை எடுத்துக் கொள்ளவும், அது a > 1.
 
(2a, a^2 - 1, a^2 + 1) இவை தான் பிதகோரியன் மும்மடங்காகும்.
 
 பிதகோரியன் மும்மடங்கின் பொதுவான சூத்திரம் (2a)^2 + (a^2 - 1)^2 = (a^2 + 1)^2.
சிறிய எண் 10 இன் பிதகோரியன் மும்மடங்கை கண்டுபிடிக்கவும்.
  
பிதகோரியன் மும்மடங்கின் பொதுவான சூத்திரம்  (2a, a^2 - 1, a^2 + 1).
 
சிறிய எண் (2a) = 10
 
a = 10 / 2
 
a = 5
 
a^2 - 1 = 5^2 - 1 = 24
 
a^2 + 1 = 5^2 + 1 = 26
 
பிதகோரியன் மும்மடங்கு (10, 24, 26).
 
கொடுக்கப்பட்டுள்ள மும்மடங்கானது பித்தகோரியனில் வருகிறதா இல்லையா என்று கண்டறிக:
 
(2a)^2 + (a^2 - 1)^2 = (a^2 + 1)^2
 
10^2 + 24^2 = 26^2
 
100 + 576 = 676
 
676 = 676
  
எண், (10, 24, 26) பிதகோரியன் மும்மடங்காகும்.