PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதசம வடிவிலுள்ள எண்களின் வர்கமூலத்தைக் கணக்கிட நாம் பின்வரும் படிகளைப் பின்பற்றுவோம்:
படி 1: தசம புள்ளி அல்லாமல் கொடுத்த தசம எண்ணிற்கு வர்க்க மூலத்தை கண்டுப்பிடிக்க வேண்டும்.
படி 2: அடுத்து கிடைத்த எண்ணில் தசம எண்ணை சரியாக வைக்க வேண்டும்
குறிப்பு:
(i) கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் இரண்டு தசம புள்ளி இருந்தால் அதனுடைய வர்க்க எண்ணில் ஒரு தசம புள்ளி தான் இருக்கும்.
\(\frac{\text{கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் இருக்கும் தசம புள்ளிகள் }}{2} = \frac{2}{2} = 1\)
(ii) கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் நான்கு தசம புள்ளி இருந்தால் அதனுடைய வர்க்க எண்ணில் இரண்டு தசம புள்ளிகள் இருக்கும்.
\(\frac{\text{கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் இருக்கும் தசம புள்ளிகள்}}{2} = \frac{4}{2} = 2\)
எடுத்துக்காட்டு:
Example:
\(1.44\) என்ற எண்ணிற்குவர்க்க மூலத்தை கணக்கிடவும்.
விடை:
கொடுக்கப்பட்ட எண் \(1.44\).
முதலில் தசம புள்ளி அல்லாமல் கொடுத்த தசம எண்ணிற்கு வர்க்க மூலத்தை கண்டுப்பிடிக்க வேண்டும்.
இதை, \(144\) வை பெருக்கலின் பகா காரணிகளாக எழுத வேண்டும்.
\(144 = 2 \times 2 \times 2 \times 2 \times 3 \times 3\)
பகா காரணிகளை சேர்த்து எழுத வேண்டும்
\(144 = (2 \times 2) \times (2 \times 2) \times (3 \times 3)\)
இப்பொழுது,எந்த காரணிகளும் இங்கே மீதமில்லை
அதனால் கொடுத்த எண் முழு வர்க்க என்ன ஆகும்.
ஒவ்வொரு காரணியில் இருந்தும் ஒரு எண்ணை எடுக்க வேண்டும்.
\(=\) \(2 \times 2 \times 3\)
\(=\) \(12\)
எனவே, \(\sqrt{144} = 12\).
அடுத்து கிடைத்த எண்ணில் தசம புள்ளியை சரியாக வைக்க வேண்டும்.
கொடுத்த எண்ணில் இரண்டு தசம புள்ளிகள் இருந்ததால் கண்டிப்பாக நமக்கு கிடைக்கும் பதிலில் ஒரு தசம புள்ளி வரும்.
எனவே கொடுத்த தசம எண்ணின் வர்க்க மூலம் \(1.44\) \(=\) \(1.2\) ஆகும்.