PDF chapter test TRY NOW

அடுக்குகளை பயன்படுத்தி எண்களை விரிவாக்கம் செய்வதற்க்கான படிகள்:
படி 1: ஒவ்வொரு இலக்கத்தின் இட மதிப்பைக் கண்டறிந்து கூட்டல் வடிவத்தில் எழுதவும்.
 
படி 2: ஒவ்வொரு இலக்கத்தையும் அதன் இட மதிப்பால் பெருக்கவும்.
 
படி 3: இடமதிப்புகளை 10-ன் படிகளாக எழுத வேண்டும்..
Example:
1. அடுக்குமுறையை பயன்படுத்தி 3854-ன் விரிவாக்கப்பட்ட அமைப்பைக் கண்டுபிடி.
 
3854 = 3000 + 800 + 50 + 4
 
= (3 \times 1000) + (8 \times 100) + (5 \times 10) + (4 \times 1)
 
= (3 \times 10^3) + (8 \times 10^2) + (5 \times 10^1) + (4 \times 10^0)
 
விரிவாக்கப்பட்ட அமைப்பானது, 3854 = (3 \times 10^3) + (8 \times 10^2) + (5 \times 10^1) + (4 \times 10^0).
 
 
2. அடுக்குமுறையை பயன்படுத்தி 438.54-ன் விரிவாக்கப்பட்ட அமைப்பைக் கண்டுபிடி.
 
438.54 = 400 + 30 + 8 + \frac{5}{10}+ \frac{4}{100}
 
= (4 \times 100) + (3 \times 10) + (8 \times 1) + (5 \times \frac{1}{10}) + (4 \times \frac{1}{100})
 
= (4 \times 10^2) + (3 \times 10^1) + (8 \times 10^0) + (5 \times 10^{-1}) + (4 \times 10^{-2})
 
விரிவாக்கப்பட்ட அமைப்பானது, 438.54 = (4 \times 10^2) + (3 \times 10^1) + (8 \times 10^0) + (5 \times 10^{-1}) + (4 \times 10^{-2}).