PDF chapter test TRY NOW

ஒருபடிச் சமன்பாடுகளின் தீர்வுகள்:
கொடுக்கப்பட்ட சமன்பாட்டில் உள்ள மாறிகளுக்குப் பதிலாக பிரதியிடும் எண்ணானது, சமன்பாட்டின் இருபுறமும் ஒரே மதிப்பைக் கொடுத்தால், அவ்வெண்ணை அச்சமன்பாட்டின் தீர்வு அல்லது மூலம் எனப்படும்.
Example:
\(2x=10\) என்ற சமன்பாட்டை \(x=5\) ஆனது நிறைவுச் செய்கிறது.
 
அதாவது, இந்த சமன்பாட்டில் \(x=5\) எனப் பிரதியிட்டல் இருபுறமும் சமமதிப்பு கிடைக்கும்.
 
எனவே, இந்த சமன்பாட்டின் தீர்வு \(x=5\) ஆகும்.
செயல்-எதிர் செயல் முறை:
 
\(x\) என்ற எண்ணிலிருந்து \(2x-5\) என்ற நிலையை அடைய கழித்தல், பெருக்கல் போன்ற செயல்களை நாம் மேற்கொள்ள வேண்டும்.
 
எனவே, \(2x-5=6\) எனக் கொடுக்கப்பட்டால் \(x\) இன் மதிப்பை பெற கொடுக்கப்பட்ட செயல்களுக்கு எதிர் செயலான கூட்டல் மற்றும் வகுத்தலை செய்ய வேண்டும்.
 
அதாவது, அடிப்படை செயல்கள் மூலம் சமன்பாட்டைஅமைக்கின்றோம். மேலும் எதிர்ச் செயல்களை செய்து அதற்கான தீர்வைப் பெறுகின்றோம்.
இட மாற்று முறை:
சமன்பாட்டில் ஒரு பக்கத்தில் உள்ள ஓர் எண்ணை மற்றொரு பக்கத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண்பது இடமாற்று முறை ஆகும்.
Example:
\(3x+5=20\)
 
இங்கு \(x\) இன் மதிப்பைப் பெற செயல்களின் எதிர்ச் செயல்களை செய்ய வேண்டும்.
 
அதாவது, \(3x+5=20\) என்ற சமன்பாட்டில்
 
\(+5\) வலதுபுறம் வரும்போது  \(-5\) ஆகும்.
 
எனவே, \(3x=20-5\)
 
\(3x=15\)
 
மேலும் \(x\) உடன் பெருக்கலில் உள்ள \(3\) வலது புறம் வரும்போது வகுத்தலில் வரும்
 
அதாவது \(x=15\div 3\)
 
எனவே, \(x=5\).