PDF chapter test TRY NOW

தளத்தில் அமைந்த வரைபடத்தை ஆயஅச்சுகள் நான்கு கால்பகுதிகளாக பிரிக்கின்றன. வழக்கமாக இந்த கால்பகுதிகளைக் கடிகார இயக்கதிசைக்கு எதிர்த் திசையில் \(X\) அச்சின் நேர்குறி திசையில் இருந்து தொடங்கிப் பெயரிடப்படும்.
 
I கால்பகுதி
  • முதல் கால்பகுதியில் அமைந்த புள்ளிகள் நேர்க்குறி உடைய புள்ளிகள் ஆகும்.
  • அதாவது, \(x > 0\), \(y > 0\).
  • \(XOY\) தளத்தில் அமையும்.
Example:
\((2,3)\), \((6,10)\), \((9,12)\)
II கால்பகுதி
  • இரண்டாவது கால்பகுதியில் அமையும் புள்ளிகள் \(x\) -அச்சில் எதிகுறியையும் \(y\) -அச்சில் நேர்க்குறியையும் பெற்றிருக்கும்.
  • அதாவது, \(x < 0\), \(y > 0\).
  • \(X'OY\) தளத்தில் அமையும்.
Example:
\((-3,6)\), \((-2,5)\), \((-15,12)\)
III கால்பகுதி
  • மூன்றாவது கால்பகுதியில் அமையும் புள்ளிகள் \(x\) -அச்சு மற்றும் \(y\) -அச்சில் எதிர்க்குறியையும் பெற்றிருக்கும்.
  • அதாவது, \(x < 0\), \(y < 0\).
  • மேலும், \(X'OY'\) தளத்தில் அமையும்.
Example:
\((-5,-6)\), \((-2,-1)\), \((-8,-10)\)
IV கால்பகுதி
  • நான்காவது கால்பகுதியில் அமையும் புள்ளிகள் \(x\) -அச்சில் எதிகுறியையும் \(y\) -அச்சில் நேர்க்குறியையும் பெற்றிருக்கும்.
  • அதாவது, \(x > 0\), \(y < 0\).
  • \(XOY'\) தளத்தில் அமையும்.
Example:
\((1,-3)\), \((3, -4)\), \((7,-1)\)  
YCIND20220807_4208_Graph_04.png
  
ஆய அச்சுகள் மீது ஒரு புள்ளியின் ஆயத் தொலைவுகள்:
  
\(y = 0\) எனில் \((x, 0)\) என்ற புள்ளி \(X\) அச்சின் மீது அமைந்திருக்கும்.
Example:
\((2,0), (–5,0), (7,0)\) ஆகிய புள்ளிகள் \(X\) அச்சின் மீது உள்ளன.
\(x = 0\) எனில் \((0,y)\) என்ற புள்ளி \(Y\) அச்சின் மீது அமைந்திருக்கும்.
Example:
\((0,3), (0,–4), (0,9)\) ஆகிய புள்ளிகள் \(Y\) அச்சின் மீது உள்ளன.