PDF chapter test TRY NOW

(6,5) என்ற புள்ளியை வரைப்படத்தில் குறிப்போம்:
 
1. (0,0) என்ற ஆதியிலிருந்து 6 அலகு தொலைவில் OX இல் எடுத்துக்கொள்வோம்.
 
2. x அச்சில் 6 அலகு தொலைவில்  OY இல் 5 எடுத்து (6,5) ஐக் குறிக்கலாம்.
 
1259_8.png
Example:
(2,-3), (4,5), (-7,3), (0,3) மற்றும் (-4,0) ஆகிய புள்ளிகளை வரைபடத்தில் குறிக்கவும்.
 
தீர்வு:
 
(i) (2,-3):
 
ஆதிப்புள்ளி (0,0) இலிருந்து OX வழியாக 2 அலகுகள் நகர்ந்து பிறகு 2 இலிருந்து OYக்கு இணையாக -3 அலகுகள் நகர்ந்தால் புள்ளி (2,-3)ஐக் குறிக்கலாம்.
 
(ii) (4,5):
 
ஆதிப்புள்ளி (0,0) இலிருந்து OX வழியாக 4 அலகுகள் நகர்ந்து பிறகு 4 இலிருந்து OYக்கு இணையாக 5 அலகுகள் நகர்ந்தால் புள்ளி (4,5)ஐக் குறிக்கலாம்.
 
(iii) (-7,3):
 
ஆதிப்புள்ளி (0,0) இலிருந்து OX வழியாக -7 அலகுகள் நகர்ந்து பிறகு -7 இலிருந்து OYக்கு இணையாக 3 அலகுகள் நகர்ந்தால் புள்ளி (-7,3)ஐக் குறிக்கலாம்.
 
(iv) (0,3):
 
ஆதிப்புள்ளி (0,0) இலிருந்து OX வழியாக 0 அலகுகள் நகர்ந்து பிறகு 0 இலிருந்து OYக்கு இணையாக 3 அலகுகள் நகர்ந்தால் புள்ளி (0,3)ஐக் குறிக்கலாம்.
 
(v) (-4,0):
 
ஆதிப்புள்ளி (0,0) இலிருந்து OX வழியாக -4 அலகுகள் நகர்ந்து பிறகு -4 இல் -4,0 ஐக் குறிக்கலாம்.
 
1259_9.png