PDF chapter test TRY NOW
\(x\) அச்சுக்கு இணையான நேர்க்கோடு:
ஒரு நேர்க்கோடானது \(X\) அச்சுக்கு இணையாக உள்ளது எனில், அக்கோடு \(X\) அச்சில் உள்ள
ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் சம தொலைவில் இருக்கும். இதனை \(y = c\) எனக் குறிக்கின்றோம்.
\(y\) அச்சுக்கு இணையான நேர்க்கோடு:
ஒரு நேர்க்கோடானது \(Y\) அச்சுக்கு இணையாக உள்ளது எனில், அக்கோடு \(Y\) அச்சில் உள்ள
ஒவ்வொரு புள்ளியில் இருந்தும் சம தொலைவில் இருக்கும். இதனை \(x = k\) எனக் குறிக்கின்றோம்.
Example:
\(y = 2\) என்ற சமன்பாட்டிற்கு வரைபடம் வரைக.
தீர்வு:
\(y = 2\) என்பது \(y\) இன் எந்த மதிப்புக்கும் \(x\) இன் ஆயத்தொலைவு எப்போதும் \(2\) ஆகவே இருக்கும்.
எனவே, நாம் \(y\) இன் ஆயத்தொலைவிற்கு மதிப்பு கொடுத்து கீழ்க்கண்டவாறு அட்டவணைப்படுத்தலாம்.
\(x\) | \(-1\) | \(0\) | \(1\) | \(2\) | \(3\) |
\(y\) | \(2\) | \(2\) | \(2\) | \(2\) | \(2\) |
எனவே, \((-1,2)\), \((0,2)\), \((1,2)\), \((2,2)\), மற்றும் \((3,2)\) ஆகிய புள்ளிகளை வரைபடத்தாளில் \(A\), \(B\), \(C\), \(D\) மற்றும் \(E\) எனக் குறித்து, அவற்றை இணைக்கவும்.
இங்கு, கிடைக்கப்பெற்ற நேரக்கோடு \(x\) அச்சுக்கு இணையாக இருக்கிறது.