PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
(1,5), (-9, 10) என்பதை வரைப்படத்தாளில் எவ்வாறு குறிப்பது என்பதை அறிவோம்.
 
(56, 78), (89, 45) போன்ற பெரிய மதிப்புகளில் வரைய இயலுமா?
 
இயலும், வரைபடத்தாளில் Y மற்றும் X இன் பெரிய மடங்குகளாக அமையும் சூழ்நிலையில் வரைபடத்தாளில் வழக்கமாக ஓரலகுகளில் குறிக்கும் அளவு Y மற்றும் X ஆயத் தொலைவுகளுக்குப் போதுமானதாக இருக்காது.
 
இவ்வாறான சூழ்நிலைகளில் இரண்டு அச்சுகளுக்கும் தேவைக்கு ஏற்ப அளவுத்திட்டத்தை மாற்றியமைத்துப் பயன்படுத்துகின்றோம்.
 
பொருத்தமான அளவுத்திட்டத்தை வரைபடத்தாளில் வலதுபுறமூலையில் குறிப்பிடுவோம்.
Example:
1. கீழ்க்கண்ட வரைப்படத்தின் அளவுத்திட்டத்தைக் காண்க.
 
1259_13.png
 
தீர்வு:
 
கொடுக்கப்பட்ட வரைப்படத்தில் x -அச்சின் மதிப்பு 1 அலகாக அதிகரிக்கிறது.
 
ஆகவே, x - அச்சின் அளவுத்திட்டம் 1 செ.மீ = 1 அலகு.
 
y - அச்சின் மதிப்பு 10 அலகாக அதிகரிக்கிறது.
 
எனவே, y - அச்சின் அளவுத்திட்டம் 1 செ.மீ  = 10 அலகுகள்.
 
2. கீழ்க்கண்ட வரைப்படத்தின் அளவுத்திட்டத்தைக் காண்க.
 
1259_14.png
 
தீர்வு:
 
கொடுக்கப்பட்ட வரைப்படத்தில் x -அச்சின் மதிப்பு 50 அலகாக அதிகரிக்கிறது.
 
ஆகவே, x - அச்சின் அளவுத்திட்டம் 1 செ.மீ = 50 அலகுகள்.
 
y - அச்சின் மதிப்பு 50 அலகாக அதிகரிக்கிறது.
 
எனவே, y - அச்சின் அளவுத்திட்டம் 1 செ.மீ  = 50 அலகுகள்.