PDF chapter test TRY NOW
நேர்க்கோடு வரைதல்:
வரைபடத்தாளில் புள்ளிகள் வெவ்வேறு வரிசைகளில் அமைந்திருக்கும்.
ஏதேனும் இரு புள்ளிகளை இணைத்தால் நமக்கு ஒரு நேர்க்கோடு கிடைக்கும்.
Example:
1. \((1,-6)\) மற்றும் \((-2,3)\) என்ற புள்ளிகளை இணைக்கும் நேர்க்கோட்டை வரைக.
தீர்வு:
படி \(1\): \((1,-6)\) என்ற புள்ளியை \(IV\) கால்பகுதியில் குறித்து \(A\) என்று பெயரிடுக.
படி \(2\): \((-2,3)\) என்ற புள்ளியை \(II\) கால்பகுதியில் குறித்து \(B\) என்று பெயரிடுக.
படி \(3\): \(A\) மற்றும் \(B\)யை இணைக்க ஒரு நேர்க்கோடு கிடைக்கும்.
இங்கு, நேர்க்கோடனது \(x\) - அச்சை \((-1,0)\) என்ற புள்ளியிலும் \(y\) - அச்சை \((0,-3)\) என்ற புள்ளியிலும் வெட்டுகிறது.
2. \((1,-6)\), \((-2,3)\), \((1,2)\) மற்றும் \((-3,-2)\) என்ற புள்ளிகளை இணைக்கும் நேர்க்கோட்டை வரைக.
தீர்வு:
படி \(1\): \((1,-6)\) என்ற புள்ளியை \(IV\) கால்பகுதியில் குறித்து \(A\) என்று பெயரிடவும்.
படி \(2\): \((-2,3)\) என்ற புள்ளியை \(II\) கால்பகுதியில் குறித்து \(B\) என்று பெயரிடவும்.
படி \(3\):\((1,2)\)என்ற புள்ளியை \(I\) கால்பகுதியில் குறித்து \(C\) என்று பெயரிடவும்.
படி \(4\): \((-3,-2)\) என்ற புள்ளியை \(III\) கால்பகுதியில் குறித்து \(D\) என்று பெயரிடவும்.
படி \(5\): \(A\), \(B\) மற்றும் \(C\), \(D\) ஐ இணைக்கவும்.
படி \(6\): இரண்டு நேர்க்கோடும் சந்திக்கும் புள்ளி \((-1,0)\).