PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மூன்று பக்கங்களும் ஒரு கோணமும் கொடுக்கப்பட்டிருக்கும் போது சரிவகம் வரைதல் பற்றி காணலாம்.
Example:
\(\overline{FI}\) இணை \(\overline{NE}\), \(FI\) \(=\) \(8.5\) செ.மீ, \(IN\) \(=\) \(6.5\) செ.மீ, \(FE\) \(=\) \(7.5\) செ.மீ மற்றும் \(\angle FIN\) \(=\) \(75^{\circ}\) அளவுகளைக் கொண்ட \(FINE\) என்ற சரிவகம் வரைக.
 
வரைமுறை:
  
படி 1: \(FI\) \(=\) \(8.5\) செ.மீ என்ற நேர்கோடு வரைக.
 
YCIND20220921_4481_Geometry_1-10.png
 
படி 2: \(I\) இல், \(\angle FIX\) \(=75^{\circ}\) ஐ அமைக்கவும்.
 
YCIND20220921_4481_Geometry_1-11.png
 
படி 3: \(I\) ஐ மையமாக கொண்டு \(6.5\) செ.மீ ஆரமுள்ள வட்டவில்லானது \(IX\) ஐ \(N\) இல் வெட்டுமாறு அமைக்கவும்.
 
YCIND20220921_4481_Geometry_1-12.png
 
படி 4:  \(FI\) க்கு இணையாக \(NY\) வரைக.
 
YCIND20220921_4481_Geometry_1-13.png
 
படி 5: \(F\) ஐ மையமாகக் கொண்டு \(7.5\) செ.மீ ஆரமுள்ள வட்ட வில்லானது \(NY\) ஐ \(E\) இல் வெட்டுமாறு அமைக்கவும்.
 
YCIND20220921_4481_Geometry_1-14.png
 
படி 6: \(FE\) ஐ இணைக்கவும். \(FINE\) என்ற தேவையான சரிவகம் கிடைக்கும்.
 
YCIND20220921_4481_Geometry_1-15.png