PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரிவகம்:
ஒரு சோடி எதிர்ப்பக்கங்களை இணையாகக் கொண்ட ஒரு நாற்கரமே சரிவகமாகும்.
Trapezium.png
 
படத்திலிருந்து, \(AB\) மற்றும் \(CD\) ஆகியவை இணைபக்கங்கள் மற்றும் \(AD\) மற்றும் \(BC\) ஆகியவை இணை பக்கங்கள் அல்ல.
 
Important!
• இணை பக்கங்களுக்கு இடையேயுள்ள தொலைவு சரிவகத்ஹ்டின் உயரம் ஆகும், படத்திலிருந்து, \(CX\) என்பது உயரம் ஆகும்.
 
• சரிவகத்தின் அனைத்து கோணங்களின் கூடுதல் \(360^{\circ}\) ஆகும்.
 
இருசமபக்கச் சரிவகம்:
ஒரு சரிவகத்தின் இணையற்ற பக்கங்கள் சமமாகவும் அடிப்பக்கத்தின் மீது சம அளவுள்ள கோணங்களையும் உருவாக்கினால், அது ஓர் இருசமபக்கச் சரிவகம் ஆகும்.
Isos_Trapezium.png
 
இங்கு, \(AD\) மற்றும் \(BC\) ஆகியன சமம் மற்றும் \(\angle A\) மற்றும் \(\angle B\) ஆகியன சமம்.
 
சரிவகத்தின் பரப்பளவு:
 
சரிவகத்தின் பரப்பளவு \(A = \frac{1}{2} \times h \times (a +b)\) சதுர அலகுகள் என்ற சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது.
 
இங்கு, \(h\) என்பது சரிவகத்தின் உயரம் ஆகும்.
 
\(a\) மற்றும் \(b\) என்பன இணைப்பக்கங்களின் நீளம் ஆகும்.
Example:
சரிவகத்தின் உயரம்' \(12\) செ.மீ மற்றும் இணைப்பக்கங்களின் அளவுகள் \(5\) செ.மீ மற்றும் \(6\) செ.மீ எனில் சரிவகத்தின் பரப்பளவு காண்க:
 
தீர்வு:
 
கொடுக்கப்பட்டது \(h\) \(=\) \(12\) செ.மீ, \(a\) \(=\) \(5\) செ.மீ மற்றும் \(b\) \(=\) \(6\) செ.மீ.
 
சரிவகத்தின் பரப்பளவு, \(A\) \(=\) \(\frac{1}{2} \times h \times (a +b)\)
 
\(=\) \(\frac{1}{2} \times 12 \times (5 + 6)\)
 
\(=\) \(6 \times 11\)
 
\(=\) \(66\) செ.மீ \(^2\)
சரிவகம் வரையும் வழிகள்:
 
கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைப் பயன்படுத்தி சரிவகம் வரையும் முறைகளைக் காணலாம்.
  
1. மூன்று பக்கங்கள் மற்றும் ஒரு மூலைவிட்டம்.
 
2. மூன்று பக்கங்கள் மற்றும் ஒரு கோணம்.
  
3. இரு பக்கங்கள் மற்றும் இரு கோணங்கள்.
 
4. நான்கு பக்கங்கள்.