PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇணைகரம்:
எதிர் எதிர் பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரம் இணைகரம் ஆகும்.
படத்திலிருந்து, \(AB\) மற்றும்\(CD\), மற்றும் \(AD\) மற்றும் \(BC\) ஆகியவை இணைப்பக்கங்கள் ஆகும்.
Important!
• மூலைவிட்டங்கள் ஒன்றுக்கொன்று இருசமக் கூறிடும்.
• எதிர்ப்பக்கங்கள் இணையாக இருக்கும்.
• எதிர்க்கோணங்கள் சமமாக இருக்கும்.
இணைகரத்தின் பரப்பளவு:
இணைகரத்தின் பரப்பளவு \(A = b \times h\) square units. என்ற சூத்திரத்தின் மூலம் கணக்கிடப்படுகிறது.
இங்கு, \(h\) என்பது இணைகரத்தின் உயரம் மற்றும் \(b\) என்பது இணைகரத்தின் அடிப்பக்கம்.
Example:
இணைகரத்தின் உயரம் மற்றும் அடிப்பக்கம் முறையே \(12\) செ.மீ மற்றும் \(6\) செ.மீ எனில் இணைகரத்தின் பரப்பளவு காண்க:
தீர்வு:
கொடுக்கப்பட்டது: இணைகரத்தின் உயரம் \(h\) \(=\) \(12\) செ.மீ மற்றும் அடிப்பக்கம் \(b\) \(=\) \(6\) செ.மீ.
இணைகரத்தின் பரப்பளவு, \(A\) \(=\) \(b \times h\)
\(=\) \(12 \times 6\)
\(=\) \(72\) செ.மீ \(^2\)
இணைகரம் வரைதல்:
கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைப் பயன்படுத்தி இணைகரத்தை வரையும் முறைகளைக் காணலாம்.
1. இரண்டு அடுத்துள்ள பக்கங்கள் மற்றும் ஒரு கோணம்.
2. இரண்டு அடுத்துள்ள பக்கங்கள் மற்றும் ஒரு மூலைவிட்டம்.
3. இரண்டு மூலைவிட்டங்கள் மற்றும் அவற்றிற்கிடைப்பட்ட ஒரு கோணம்.
4. ஒரு பக்கம், ஒரு மூலைவிட்டம் மற்றும் ஒரு கோணம்.