PDF chapter test TRY NOW

இரு அடுத்துள்ள பக்கங்களும் ஒரு கோணமும் கொடுக்கப்பட்டிருக்கும் போது இணைகரம் வரைதல் பற்றி காணலாம்.
Example:
AB = 6 செ.மீ, BC = 5.5 செ.மீ மற்றும் \angle ABC = 75^{\circ} அளவுகள் கொண்ட ABCD என்ற இணைகரம் வரைக.
 
வரைமுறை:
 
படி 1: AB = 6 செ.மீ என்ற நேர்க்கோடு வரைக.
 
YCIND20220915_4460_Geometry_Median,construction of Parallelogram_01.png
 
படி 2: B இல் \angle ABX=75^{\circ} என்ற கோணம் வரைக.
 
YCIND20220915_4460_Geometry_Median,construction of Parallelogram_02.png
 
படி 3: B ஐ மையாமாக வைத்து 5.5 செ.மீ ஆரமுள்ள வட்டவில்லானது BX ஐ C இல் வெட்டுமாறு அமைக்கவும்.
 
YCIND20220915_4460_Geometry_Median,construction of Parallelogram_03.png
 
படி 4: A மற்றும் C ஐ மையங்களாகக் கொண்டு, முறையே 5.5 செ.மீ மற்றும் 6 செ.மீ ஆரமுள்ள வட்டவிற்கள் வரைக. அவை D இல் வெட்டட்டும்.
 
YCIND20220915_4460_Geometry_Median,construction of Parallelogram_04.png
 
படி 5: AD மற்றும் CD யை இணைக்கவும். ABCD என்பது தேவையான இணைகரம் ஆகும்.
 
YCIND20220915_4460_Geometry_Median,construction of Parallelogram_05.png
 
படி 6: C லிருந்து AB க்கு ஒரு செங்குத்து கோடு வரைந்தால் இணைகரம் ABCD யின் உயரம் கிடைக்கும்.
 
YCIND20220915_4460_Geometry_Median,construction of Parallelogram_06.png