PDF chapter test TRY NOW
இரு மூலைவிட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் போது சாய்சதுரம் வரைதல் பற்றி இங்கு காணலாம்.
Example:
WS = 9 செ.மீ மற்றும் ET= 4 செ.மீ அளவுகள் கொண்ட WEST என்ற சாய்சதுரம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க.
படி 1: WS = 9 செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைக.

படி 2: WS இக்கு மையக்குத்துக்கோடு XY ஐ வரைக. அது WS ஐ O இல் வெட்டட்டும்.

படி 3: O ஐ மையமாகக் கொண்டு, O இன் இருபுறமும் 2 செ.மீ ஆரமுள்ள வட்டவிற்கள் OX ஐ T இலும் மற்றும் OY ஐ E இலும் வெட்டுமாறு வரைக.

படி 4: WE, ES, ST மற்றும் TW ஐ இணைக்க.

சாய்சதுரத்தின் பரப்பளவு காணுதல்:
\text{சாய்சதுரத்தின் பரப்பளவு} = \frac{1}{2} \times d_1 \times d_2
\text{சாய்சதுரத்தின் பரப்பளவு} = \frac{1}{2} \times 9 \times 4
= 36 செ.மீ ^2