PDF chapter test TRY NOW
ஒரு மூலைவிட்டமும் ஒரு கோணமும் கொடுக்கப்பட்டிருக்கும் போது சாய்சதுரம் வரைதல் பற்றி இங்கு காணலாம்.
Example:
GR = 7 செ.மீ மற்றும் ∠G=100^° அளவுகள் கொண்ட GARM என்ற சாய்சதுரம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க.
படி 1: GR = 7 செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைக.

படி 2: G இல் GR இன் இருபுறமும், ∠RGX = ∠RGY =50^° ஐ வரைக.

படி 3: R இல் GR இன் இருபுறமும், ∠GRP= ∠GRQ =50^° ஐ வரைக. GX மற்றும் RP ஆனது M இலும், GY மற்றும் RQ ஆனது A இலும் வெட்டட்டும். GARM என்பது தேவையான சாய்சதுரம் ஆகும்.

படி 4: MA மற்றும் GR ஐ இணைத்தல் சாய்சதுரத்தின் மூலைவிட்டன்களைக் காணலாம்.
