PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகுறுங்கோண முக்கோணத்தின் செங்குத்துகோடு:
அனைத்து செங்குத்துகோடுகளும் முக்கோணத்தின் உள்ளேயே அமையும்.
இங்கு,\(ABC\) என்பது குறுங்கோண முக்கோணம். மேலும்,\(AF, BD\) மற்றும் \(CE\) என்ற செங்குத்து கோடுகள் முக்கோணத்தின் உள்ளயே அமைவதைக் காணலாம்.
செங்கோண முக்கோணத்தின் செங்குத்து கோடுகள்:
செங்கோண முக்கோணத்தில் கர்ணத்திற்கு வரையப்படும் செங்குத்து கோடு மட்டும் முக்கோணத்தின் உள்ளே அமைந்திருக்கும் மற்ற செங்குத்து கோடுகள் முக்கோணத்தின் பக்கங்களில் அமைந்திருக்கும்.
இங்கு, முக்கோணம் \(ABC\) இல், \(BD\) என்ற செங்குத்து கோடு முக்கோணத்தின் உள்ளே அமைந்திருக்கிறது. \(AB\) மற்றும் \(BC\) என்ற செங்குத்து கோடுகள் முக்கோணத்தின் பக்கங்கள் ஆகும்.
விரிகோண முக்கோணத்தின் செங்குத்து கோடுகள்:
விரிகோணத்தில் இருந்து வரையப்படும் செங்குத்து கோடு முக்கோணத்தின் உள்ளே அமைந்திருக்கும். மற்ற இரு செங்குத்துகொடுகள் முக்கோணத்தின் வெளியே அமைந்திருக்கும்.
இங்கு, \(ABC\) என்ற விரிகோண முக்கோணத்தில், \(AF\) என்ற செங்குத்து கோடுகள் முக்கோணத்தின் உள்ளேயும் \(BD\) மற்று \(CE\) என்ற செங்குத்து கோடுகள் முக்கோணத்தின் வெளியில் அமைந்துள்ளது.
சமபக்க முக்கோணத்தின் செங்குத்து கோடுகள்:
சமபக்க முக்கோணத்தின் செங்குத்து கோடுகள் எதிரே உள்ள பக்கத்தை இருசமப் பாகங்களாக பிரிக்கும்.
இங்கு, சமபக்கமுக்கோணம் \(ABC\) இல் \(AF, BD\) மற்றும் \(CE\) என்ற செங்குத்து கோடுகள் நடுகோடுகளாக அமையும்.
இருசமபக்க முக்கோணத்தின் செங்குத்துகோடுகள்:
இருசமபக்க முக்கோணத்தின் அசமபக்கத்திற்கு வரையப்படும் செங்குத்து கோடு மற்றும் நடுகோடாக அமையும்.
இங்கு, முக்கோணம் \(ABC\) இல் \(AF, BD\) மற்றும் \(CE\) என்பன செங்குத்து கோடுகள் ஆகும். மேலும், \(AF\) என்பது \(B\) மற்றும் \(C\) இன் நடுக்கோடு ஆகும்.