PDF chapter test TRY NOW

1. ஒரு பள்ளியில் எல்லா மாணவர்களும் வளைகோற்பந்தாட்டம் அல்லது மட்டைப் பந்து அல்லது இரண்டும் விளையாடுகிறார்கள். \(300\) மாணவர்கள் வளைகோற்பந்தாட்டம் விளையாட்டையும், \(250\) மாணவர்கள் மட்டைப் பந்து விளையாட்டையும், \(110\) மாணவர்கள் இரண்டையும் விளையாடுகிறார்கள் எனில்:
 
(i) எத்தனை மாணவர்கள் வளைகோற்பந்தாட்டம் மட்டும் விளையாடுகிறார்கள்.
 
 
(ii) எத்தனை மாணவர்கள் மட்டைப் பந்து மட்டும் விளையாடுகிறார்கள்.
 
 
(iii) பள்ளியில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.
 
 
 
2. ஒரு விருந்தில் \(60\) பேர் கலந்து கொண்டனர். அதில் \(35\) பேர் வென்னிலா பனிக்கூழ் (vennila ice cream) மற்றும் \(30\) பேர் சாக்லேட் பனிக்கூழ் (chocolate ice cream) எடுத்துக் கொண்டனர். பங்கேற்றவர்களில் அனைவரும் குறைந்தபட்சம் ஒரு வகைப் பனிக்கூழையாவது எடுத்துக் கொண்டால்:
 
(i) வென்னிலா மற்றும் சாக்லேட் என இரண்டு வகைப் பனிக் கூழையும் எடுத்துக் கொண்டவர்கள்.
 
 
(ii) வென்னிலா பனிக்கூழ் மட்டும் எடுத்துக் கொண்டவர்கள்.
 
 
(iii) சாக்லேட் பனிக்கூழ் மட்டும் எடுத்துக்கொண்டவர்கள் எண்ணிக்கையைக் காண்க.