PDF chapter test TRY NOW

ஒரு எண்ணின் மூலத்தை முழு எண்ணாகவோ  அல்லது விகிதமுறு எண்ணாகவோ  தீர்வு காண இயலாத எண் முறுடு ஆகும். \(n \in N\) ), \(n > 1\) எனில் \(\sqrt[n]{a}\) என்பது ஒரு முறுடு ஆகும். \(a\) ஒரு விகிதமுறு எண்.
Example:
எடுத்துக்காட்டாக \(\sqrt{3}\) மற்றும் \(\sqrt[3]{4}\)-ஐ  எதுத்துக்கொள்வோம்.
 
இங்கு, \(\sqrt{3} = 1.732....\)
 
\(\sqrt[3]{4} = 1.587....\)
 
மேற்க்கண்டவற்றை நாம் சுருக்கும் பொழுது, நாம் பெறும் எண்ணானது முடிவுறாச்  சூழல் தன்மையற்ற தசம எண்ணாக கிடைக்கும் (விகிதமுறா எண்)
 
எனவே, \(\sqrt{3}\) மற்றும் \(\sqrt[3]{4}\) என்பது முறுடு  ஆகும்.
முறுடின் வரிசை
ஒரு எண்ணின் முறுடானது எந்த மூலத்திலிருந்து பெறப்படுகிறதோ, அம்மூலத்தின் வரிசை முறுடின் வரிசை எனப்படுகிறது. எனவே, \(\sqrt[n]{x}\) என்ற முறுடின் வரிசை \(n\) ஆகும்.
Example:
முறுடின் வரிசையை காண்க: \(\sqrt{31}\) மற்றும் \(\sqrt[6]{88}\).
 
தீர்வு :
 
1.  \(\sqrt{31}\)-ன் அம்மூலத்தின் வரிசை \(2\). எனவே முறுடின் வரிசை \(2\).
 
2. \(\sqrt[6]{88}\) -ன் அம்மூலத்தின் வரிசை \(6\). எனவே முறுடின் வரிசை \(6\).