PDF chapter test TRY NOW
முறுடுகளை கீழ்க்காணும் வழிகளில் வகைபடுத்தலாம்:
1. ஒரே வரிசை கொண்ட முறுடுகள்: கொடுக்கப்படும் முறுடுகளின் வரிசைகள் சமம் எனில் அம்முறுடுகள் ஒரே வரிசை கொண்ட முறுடுகள் எனப்படும். இதை சம மூலக்குறியீடு கொண்ட முறுடுகள் என்றும் அழைக்கலாம்.
Example:
\(\sqrt[3]{4}\), \(\sqrt[3]{7}\) மற்றும் \(\sqrt[3]{13}\) ஆகியன \(3\) என்னும் ஒரே வரிசை கொண்ட முறுடுகள் ஆகும்.
2. முறுடின் எளிய வடிவம்: ஒரு முறுடை விகிதமுறு மற்றும் விகிதமுறா காரணிகளின் பெருக்கலாக எழுதுவது ஒரு முறுடின் எளிய வடிவம் ஆகும். இது கீழ்க்காணும் மூன்று விதிகளை நிறைவு செய்யும்.
- மிக சிறியதான மூலத்தின் வரிசை.
- மூலக் குறியீட்டின் வரிசை பின்னமாக இருக்க கூடாது.
- வரிசை \(n\) கொண்ட மூலக் குறியீடுக்குள் \(a^n\) வடிவில் எந்த ஒரு காரணியும் இருக்கக்கூடாது, இங்கு \(a\) என்பது இரு மிகை முழு.
Example:
கொடுக்கப்பட்டுள்ள முறுடுகளை எளிய வடிவில் எழுதுக \(\sqrt{12}\) மற்றும் \(\sqrt[4]{64}\).
தீர்வு:
\(\sqrt{12} = \sqrt{4 \times 3} = 2\sqrt{3}\)
\(\sqrt[4]{64} = \sqrt[4]{2 \times 2 \times 2 \times 2 \times 4} = 4\sqrt[4]{4}\)
3. முழுமையான மற்றும் கலப்பு முறுடுகள்: ஒரு முறுடின் கெழு அல்லது குணகம் \(1\) எனில், அந்த முறுடு முழுமையான முறுடு எனப்படுகிறது. ஒரு முறுடின் கெழு அல்லது குணகம் \(1\)-ஐத் தவிர வேறு ஓர் எண்ணாக இருப்பின் அது கலப்பு முறுடு எனப்படுகிறது.
Example:
\(\sqrt[3]{5}\), \(\sqrt{2}\), \(\sqrt[4]{7}\) ஆகியன முழுமையான முறுடுகளாகும்.
\(2\sqrt[5]{16}\), \(3\sqrt[4]{9}\), \(7\sqrt[3]{5}\) ஆகியன கலப்பு முறுடுகளாகும்.
4. எளிய மற்றும் கூட்டு முறுடுகள்: ஒரு முறுடில் ஒரே ஒரு உறுப்பு மட்டும் இருப்பின் அம்முறுடு எளிய முறுடு எனப்படுகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்ப்பட்ட முறுடுகள் கூட்டல் அல்லது கழித்தல் செயலிகளால் இணைக்கப்படின் அம்முறுடு கூட்டு முறுடு எனப்படும்.
Example:
\(\sqrt{3}\), \(4 \sqrt[3]{2}\) ஆகியன எளிய முறுடு.
\(\sqrt[3]{5} + \sqrt[4]{13}\), \(\sqrt{5} - 7\sqrt[3]{8}\) ஆகியன கூட்டு முறுடு.
5. ஈருறுப்பு முறுடு: கூட்டல் அல்லது கழித்தல் முறையில் எழுதப்பட்ட இரண்டு உறுப்புக்களில் இரண்டுமே முறுடாகவோ அல்லது ஒன்று விகிதமுறு எண் மற்றொன்று முறுடாகவோ இருப்பின் அது ஈருறுப்பு முறுடு எனப்படும்.
Example:
\(\sqrt{7} - 6 \sqrt[3]{5}\), \(\frac{2}{7} + \sqrt[4]{13}\) ஆகியன ஈருறுப்பு முறுடுகளாகும்.