PDF chapter test TRY NOW

முறுடுகளை விகிதப்படுத்துதல்:  
ஓர்  உறுப்பை விகிதமுறு எண்ணாக மாற்ற அதை எந்த உறுப்பால் பெருக்கவோ அல்லது வகுக்கவோ வேண்டுமோ, அவ்வுறுப்பு விகிதப்படுத்தும் காரணி எனப்படும்.
Example:
1. \(\sqrt{19}\) இன் விகிதப்படுத்தும் காரணி \(\sqrt{19}\). ஏனெனில், இவ்விரண்டு முறுடுகளையும் பெருக்கினால் நமக்கு கிடைப்பது  \(\sqrt{19} \times \sqrt{19} = 19\) இது ஒரு விகிதமுறு எண்ணாகும்.
2. \(\sqrt[5]{4^2}\) இன் விகிதப்படுத்தும் காரணி \(\sqrt[5]{4^3}\). ஏனெனில், இவ்விரண்டு முறுடுகளையும் பெருக்கினால் நமக்கு கிடைப்பது \(\sqrt[5]{4^2} \times \sqrt[5]{4^3} = \sqrt[5]{4^5} = 4\) இது ஒரு விகிதமுறு எண்ணாகும்.
இணை முறுடுகள்:
ஒரு ஈருறுப்பு முறுடில் உள்ள உறுப்புக்களை மாற்றாமல் அதில் முறுடின் முன்னிருக்கும் குறியை மட்டும் மாற்றினால் கிடைக்கும் முறுடு இணை முறுடு என அழைக்கப்படுகின்றது.
Example:
\(4 - \sqrt{12}\) இதன் இணை முறுடை கண்டறிந்து சுருக்குக.
 
தீர்வு:
 
கொடுக்கப்பட்ட முறுடு \(4 - \sqrt{12}\).
 
இந்த முறுடை, இணை முறுடை பயன்படுத்தி அதன் முறுடின் குறியை மாற்றுக.
 
எனவே, \(4 - \sqrt{12}\)-ன் இணை முறுடானது \(4 + \sqrt{12}\).
 
தற்பொழுது இதை சுருக்குவதற்க்கு \(4 - \sqrt{12}\)-ன் இணை முறுடால் பெருக்க வேண்டும்.
 
\((4 - \sqrt{12})(4 + \sqrt{12}) = 4^2 - (\sqrt{12})^2\) [\(a^2 - b^2 = (a + b)(a - b)\)]
 
\(= 16 - 12\)
 
\(= 4\)
 
எனவே, இதன் தீர்வானது \(4\).