PDF chapter test TRY NOW

அறிவியல் குறியீட்டில் உள்ள ஓர் எண்ணை எளிய தசம வடிவில் மாற்ற பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்:
 
1. \(10\)-ன் அடுக்கில் உள்ள எண்ணிற்க்கு சமமாகத்  தசமப் புள்ளியை நகர்த்துக தேவைப்பட்டால் பூச்சியத்தை நிறப்புக.
 
2. \(10\)-ன் அடுக்கில் உள்ள எண் மிகை எண் எனில் தசமப் புள்ளியை வலப்பக்கமாகவும், குறை எண் எனில் தசமப் புள்ளியை இடப்பக்கமாகவும் நகர்த்த வேண்டும்.
  
3. அந்த எண்ணை  தசம வடிவில் எழுத வேண்டும்.
Example:
கீழ்க்காணும் எண்களை தசம வடிவில் எழுதுக: (i) \(5.23 \times 10^3\) (ii) \(7.2 \times 10^{-4}\)
 
தீர்வு:
 
(i) \(5.23 \times 10^3\) இந்த அறிவியல் குறியீட்டில், \(10\)-ன் அடுக்கு மிகை. எனவே, தசமப் புள்ளியை வலப்பக்கமாக நகர்த்தலாம்.
 
\(5.23 \times 10^{3} = 5230\)
 
எனவே, தசம எண் \(5230\) ஆகும்.
 
(ii) \(7.2 \times 10^{-4}\) இந்த அறிவியல் குறியீட்டில், \(10\)-ன் அடுக்கு குறை. எனவே, தசமப் புள்ளியை இடப்பக்கமாக நகர்த்தலாம்.
 
\(7.2 \times 10^{-4} = 0.00072\)
 
எனவே, தசம எண் \(0.00072\) ஆகும்.