PDF chapter test TRY NOW

பல்லுறுப்புக் கோவையின் பெருக்கல் மதிப்பைக் காணும் படிகள்:
  • \(2\) பல்லுறுப்புக் கோவைகளை பெருக்கல் குறியைப் பயன்படுத்தி கிடைமட்டமாக எழுத வேண்டும்.
  • முதல் பல்லுறுப்புக் கோவையின் ஒவ்வொரு உறுப்புகளையும் இரண்டாவது பல்லுறுப்புக் கோவையின் ஒவ்வொரு உறுப்புகளுடனும் பெருக்க வேண்டும்.
  • ஒத்த உறுப்புகளை இணைத்து அவற்றின் கூட்டல் பலன்களை காண வேண்டும்.
Example:
\(a + 5\)  என்ற பல்லுறுப்புக் கோவையை, \(a + 7\)  என்ற பல்லுறுப்புக் கோவையால் பெருக்குவோம்.
 
கொடுக்கப் பட்ட பல்லுறுப்புக் கோவைகளை பெருக்கல் குறியைப் பயன்படுத்தி எழுதவும்,
 
= (a+5)×(a+7)
 
முதல் பல்லுறுப்புக் கோவையின் ஒவ்வொரு உறுப்புகளையும் இரண்டாவது பல்லுறுப்புக் கோவையின் ஒவ்வொரு உறுப்புகளுடன் பெருக்க,
 
=a×(a+7) +5×(a+7)
 
=(a×a)+(a×7)+(5×a)+(5×7)
 
ஒத்த உறுப்புகளை இணைக்க,
 
=a2+7a+5a+35
 
=a2+12a+35
 
 எனவே, கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக் கோவையின் பெருக்கற்பலன் a2+12a+35.