PDF chapter test TRY NOW
மூன்று ஈருறுப்புக் கோவையின் பெருக்கற்பலன்:
(x+a)(x+b)(x+c) என்பதை எடுத்துக்கொள்வோம்.
பங்கீட்டு விதியை முதல் இரண்டு உறுப்புகளுக்கு பயன்படுத்த,
[(x+a)(x+b)](x+c) = [(x\times x)]+(x\times b)+(a\times x)+(a\times b)](x+c)
= (x^2+bx+ax+ab)(x+c)
மீண்டும் பங்கீட்டு விதியின் படி,
(x^2+bx+ax+ab)(x+c)
= (x^2\times x)+(bx\times x)+(ax\times x)+(ab\times x)+(x^2\times c)+(bx\times c)+(ax\times c)+(ab\times c).
= x^3+bx^2+ax^2+abx+cx^2+bcx+acx+abc
= x^3+ax^2+bx^2+cx^2+abx+bcx+acx+abc
= x^3+(a+b+c)x^2+(ab+bc+ac)x+abc
எனவே,
தேவையான முற்றொருமை, (x+a)(x+b)(x+c) = x^3+(a+b+c)x^2+(ab+bc+ca)x+abc.
Example:
(4y+5)(4y+3)(4y-7)
(x+a)(x+b)(x+c) = x^3+(a+b+c)x^2+(ab+bc+ca)x+abc என்ற முற்றொருமையைப் பயன்படுத்துவோம்.
(4y+5)(4y+3)(4y-7) என்பதை (x+a)(x+b)(x+c) உடன் சமப்படுத்தக் கிடைப்பது,
x=4y, a=5, b=3 மற்றும் c=-7.
இந்த மதிப்புகளைப் பிரதியிட கிடைப்பது,
(4y+5)(4y+3)(4y-7) = (4y)^3+(5+3-7)(4y)^2+((5\times 3) + (3\times -7) +(-7\times 5))(4y)+5 \times 3 \times -7)
(4y+5)(4y+3)(4y-7) = 64y^3+16y^2+(15-21-35)(4y)-105
(4y+5)(4y+3)(4y-7) = 64y^3+16y^2-164y-105