PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
உள் வட்ட மையம்:ஒரு முக்கோணத்தின் மூன்று கோண இரு சமவெட்டிகள்  சந்திக்கும் புள்ளியானது, அதன்   உள்வட்ட  மையம் என அழைக்கப்படுகிறது . இது I\ எனக்  குறிக்கப்படுகிறது.
உள் வட்டம் :ஒரு முக்கோணத்தின் மையத்தை மையமாக கொண்டு அம்முக்கோணத்தின் உள் வரையப்படும் வட்டமாகும்.
ஒரு முக்கோணத்தின் உள்வட்டம் வரைதலுகான விதிகள்:
வகை 1:
 
கொடுக்கப்பட்டவை முக்கோணத்தின் இரு பக்கங்கள் மற்றும் ஒரு கோணம்.
Example:
முக்கோணத்திற்கு ABC உள் வட்டம் வரைக AB = 8 செ.மீ, BC = 6 செ.மீ மற்றும் \angle BAC = 55^{\circ}. உள் வட்டம் வரைந்து ஆரம் காண்க.
 
செய்முறை:
 
படி 1: கொடுக்கபட்ட அளவிற்கு முக்கோணம் வரைக.
 
படி 2: கோட்டுத்துண்டு AB = 8 செ.மீ வரைக.
 
படி 3: A ஐ மையமாகவும், கோணம்55^{\circ} வரைந்து X எனப் பெயரிடுக. AX யை இணைக்க.
 
படி 4: (B\) ஐ மையமாகவும், 6 செ.மீ அளவு வில்லினை AXஇல் வரைக மற்றும் C என பெயரிடுக.
 
படி 5: இருசமவெட்டிகளைப் பயன்படுத்தி கோணம் A மற்றும் B யை வரைக.
 
படி 6: இரு சம வெட்டிகள் உண்டாக்கும் புள்ளி I, இதுவே முக்கோணத்தின் உள் வட்ட மையம் ஆகும்.
 
படி 7: I இல் இருந்து செங்குத்து இருசம வெட்டியினை AB என்ற பக்கத்திற்கு வரைக.  AB இன் மையம்D.
 
படி 8: ID இன் அளவே உள்வட்டத்தின் உள்வட்ட ஆரமாகும்.
 
படி 9: I ஐ மையமாகவும் மற்றும் ID ஐ ஆரமாகவும், கொண்டு முக்கோணத்திற்கு உள் வட்டம் வரையப்படுகிறது.
Incentre Case i GIF.gif
வகை 2:
 
கொடுக்கப்பட்டவை முக்கோணத்தின் இரு பக்கங்கள் மற்றும் ஒரு உள் கோணம்.
Example:
முக்கோணத்திற்கு ABC உள் வட்டம் வரைக AB = 6 செ.மீ, \angle BAC = 55^{\circ} மற்றும் \angle CBA = 60^{\circ}. உள் வட்டம் வரைந்து ஆரம் காண்க.
 
செய்முறை:
 
படி 1: உதவிப்படம் வரைக.
 
படி 2: கோட்டுத்துண்டு AB = 6 செ.மீ வரைக.
 
படி 3: A ஐ மையமாகவும், கோணம் 55^{\circ} யை வரைந்து X எனப் பெயரிடுக. AX யை இணைக்க.
  
படி 4: B ஐ மையமாகவும், கோணம் 60^{\circ} யை வரைந்து Y எனப் பெயரிடுக BY யை இணைக்க.
 
படி 5: இரு புள்ளிகள் சந்திக்கும் புள்ளி AX மற்றும் BY புள்ளி C.
 
படி 6: முக்கோணத்தின் இரு கோணங்களுக்கு இருசம வெட்டிகள் A மற்றும் B.
 
படி 7: இரு சம வெட்டிகள் சந்திக்கும் புள்ளி I. இதுவே முக்கோணத்தின் உள்வட்ட மையம் ஆகும்.
 
படி 8: I இல் இருந்து செங்குத்து இருசம வெட்டியினை  AB என்ற பக்கத்திற்கு வரைக AB யின் மையம் D.
 
படி 9: ID இன் அளவே உள்வட்டத்தின் உள்வட்ட ஆரமாகும்.
 
படி 10: I ஐ மையமாகவும் மற்றும் ID ஐ ஆரமாகவும், கொண்டு முக்கோணத்திற்கு உள் வட்டம் வரையப்படுகிறது.
 
Incenter case ii gif.gif