PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வரைபடத்தில் ஒரு புள்ளியை வரைவோம். இந்த புள்ளி (a,b) என வரையறுக்கப்படுகிறது, இங்கு a என்பது x - அச்சில் உள்ள செங்குத்து தூரம் மற்றும் b என்பது y - அச்சில் உள்ள செங்குத்து தூரம். இந்த சோடி (a,b) வரிசை சோடி என அழைக்கப்படுகிறது. இந்த வரிசை சோடியானது கார்டீசியன் தளத்தில் உள்ள ஒரு புள்ளியின் நிலையை அறிய உதவுகிறது.
 
இந்த வரிசை சோடியில் x-ஆயத் தொலைவானது கிடை அச்சுத் தொலைவு எனவும் y-ஆயத் தொலைவானது செங்குத்து அச்சுத் தொலைவு எனவும் குறிப்பிடப்படும்.
 
இங்கு, வரிசை ஜோடி (a,b), இதில் a என்பது x - ஆயத் தொலைவு அல்லது கிடை அச்சுத் தொலைவு, மற்றும் b என்பது y-ஆயத் தொலைவு அல்லது செங்குத்து அச்சுத் தொலைவு.
Example:
வரைபடத்தில் (2,5) என்ற வரிசை சோடியை வரைந்து அதற்க்கு A என பெயரிடுக.
 
YCIND_191022_4574_5.png
 
கொடுக்கப்பட்ட வரிசை சோடியில் x - ஆயத் தொலைவு அல்லது கிடை அச்சுத் தொலைவு ஆனது 2 அலகுகள், மற்றும் y-ஆயத் தொலைவு அல்லது செங்குத்து அச்சுத் தொலைவு 5 அலகுகள்.
Important!
வரிசை சோடிகள் (a,b) மற்றும் (b,a) சமமல்ல.