PDF chapter test TRY NOW
காற்பகுதி:
- \(x\)-அச்சு மற்றும் \(y\)-அச்சு ஒரு தளத்தை ஆதியிலிருந்து எண்ணற்ற புள்ளிகளை இரண்டு அச்சுகளுடன் நான்கு சம பாகங்களாக பிரிக்கின்றன.
- இதுவே காற்பகுதி ஆகும். காற்பகுதி ஒரு தளத்தை \(4\) சம பாகங்களாக பிரிக்கின்றன. நாம் பொதுவாக இதை \(x\) மற்றும் \(y\)இன் மிகைப்பகுதியை எல்லைகளாகக் கொண்டு கடிகார எதிரதிசையில் இருந்து தொடங்குவோம்.
- அந்த நான்கு சம பாகங்களுக்கு I, II,III மற்றும் IV எண் பெயரிடலாம்.
காற்பகுதி I:
- காற்பகுதி I இல் எந்த புள்ளியை எடுத்தாலும் \(x\)மற்றும் \(y\)-அச்சில் நேர்மறைக் குறியை பெற்றிருக்கும்.
- இதை \(( x, y)\) எனக் குறிப்பிடலாம், இங்கு \(x\) மற்றும் \(y\) ஆயத் தொலைவானது கிடைமட்ட மற்றும் செங்குத்து அச்சுத் தொலைவை குறிப்பிடலாம்.
Example:
\((2,3)\), \((6,10)\), \((9,12)\)
காற்பகுதி II:
- காற்பகுதி II இல் எந்த புள்ளியை எடுத்தாலும் \(x\)-அச்சில் எதிர்மறைக் குறியையும் மற்றும் \(y\)-அச்சில் நேர்மறைக் குறியையும் பெற்றிருக்கும்.
- இதை \((-x, y)\) எனக் குறிப்பிடலாம், இங்கு \(x\) மற்றும் \(y\) ஆயத் தொலைவானது கிடைமட்ட மற்றும் செங்குத்து அச்சுத் தொலைவை குறிப்பிடலாம்.
Example:
\((-3,6)\), \((-2,5)\), \((-15,12)\)
காற்பகுதி III:
- காற்பகுதி III இல் எந்த புள்ளியை எடுத்தாலும் \(x\) மற்றும் \(y\)-அச்சில் எதிர்மறைக் குறியையும் பெற்றிருக்கும்.
- இதை \((-x, -y)\) எனக் குறிப்பிடலாம், இங்கு \(x\) மற்றும் \(y\) ஆயத் தொலைவானது கிடைமட்ட மற்றும் செங்குத்து அச்சுத் தொலைவை குறிப்பிடலாம்.
Example:
\((-5,-6)\), \((-2,-1)\), \((-8,-10)\)
காற்பகுதி IV:
- காற்பகுதி IV இல் எந்த புள்ளியை எடுத்தாலும் \(x\)-அச்சில் நேர்மறைக் குறியையும் மற்றும் \(y\)-அச்சில் எதிர்மறைக் குறியையும் பெற்றிருக்கும்.
- இதை \((x, -y)\) எனக் குறிப்பிடலாம், இங்கு \(x\) மற்றும் \(y\) ஆயத் தொலைவானது கிடைமட்ட மற்றும் செங்குத்து அச்சுத் தொலைவை குறிப்பிடலாம்.
Example:
\((1,-3)\), \((3, -4)\), \((7,-1)\)